இன்றைய ராசிபலன்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் நல்லது நடக்கும். மனநிம்மதி உடன் காணப்படுவீர். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். அலுவலகரீதியாக பயணம் செல்வீர். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

ரிஷபம்: தம்பதிக்குள் நெருக்கம் கூடும். புது நண்பர்கள் அறிமுகமாவர். வாகனத்தை சீரமைப்பீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.

மிதுனம்: கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மனதில் மகிழ்ச்சி பொங்கும். பூர்வீக வீட்டை சீர்செய்வீர். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர். அலுவலகபணிகளை திறம்பட முடிப்பீர். வியாபாரம் லாபம் தரும்.

கடகம்: அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் அறிவுரையை ஏற்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்கு தேங்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

சிம்மம்: செலவுகளைக் குறைத்து சேமிப்பீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். பங்குதாரர்கள் நல் ஆலோசனை வழங்குவர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கன்னி: பழைய உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மதிப்புயரும்.

துலாம்: திட்டமிட்ட பணிகளை சிறப்பாக முடிப்பீர். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க எண்ணுவீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.

விருச்சிகம்: தாயாரின் ஆரோக்கியம் திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பேசி சமாளிப்பீர்கள்.

தனுசு: எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வருவதால் மனநிம்மதி கிட்டும். மனைவி வழியில் மதிப்பு உயரும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து போகவும். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். அலுவலகத்தில் பணிச்சுமை, டென்ஷன் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம்.

கும்பம்: சொந்த ஊரில் மதிக்கப்படுவீர். கவுரவப் பதவி தேடி வரும். ஷேர், கமிஷன் வகைகளால் பணம் வரும். சகோதரர்களுடன் இருந்த மோதல் நீங்கும். அலுவலக ரீதியாக பயணம் செல்வீர். வியாபாரத்தில் லாபமுண்டு.

மீனம்: பழைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பீர்கள். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். கையில் பணம் புரளும். வியாபாரத்தில் போட்டி குறையும். பணியாட்களின் ஆதரவுண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

SCROLL FOR NEXT