மேஷம்: குடும்பத்தினரிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்தவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். உத்தியோகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முயற்சிப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். வியாபாரம் லாபம் தரும். இருப்பினும் போட்டிகள் இருக்கத்தான் செய்யும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.
மிதுனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு கூடும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர்.
சிம்மம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, வீண் சந்தேகம் விலகும். அலுவலகத்தில் புது பதவி கிட்டும். பொறுப்பு கூடும். பங்குதாரர்களின் ஆலோசனைப்படி வியாபாரத்தில் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.
கன்னி: குடும்பத்தினருடன் விவாதம் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திப்பீர். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்.
துலாம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரம், உத்தியோகத்தில் மேன்மையுண்டு.
விருச்சிகம்: எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுங்கள். குடும்பத்தாருடன் மனக்கசப்புகள் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்து செல்லவும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
தனுசு: இலக்கை நோக்கி முன்னேறுவீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். அரசால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். வழக்கில் வெற்றி பெறுவீர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
மகரம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரம் மூலம் விஐபிகள் அறிமுகமாவார்கள்.
கும்பம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் வெற்றி பெற்றவர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய பதவி தேடி வரும்.
மீனம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர்கள். வீண் செலவுகளை குறையுங்கள். பிள்ளைகளால் பெருமையுண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகப் பிரச்சினைகள் தீரும்.