மேஷம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். வியாபாரம் சீராகும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
ரிஷபம்: நீங்கள் முன்பு செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
மிதுனம்: குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். குழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்ப்பீர். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.
கடகம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சேமிப்பு அதிகரிக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். பழைய சிக்கல் விலகும். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர். குடும்பத்தினரால் நிம்மதி கிடைக்கும். நண்பர்கள் தேடி வருவர். அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.
கன்னி: பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பர். அண்டை, அயலாரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. உத்தியோகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
துலாம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.
விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். மனதில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.
தனுசு: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தில் மனநிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.
மகரம்: முன்கோபத்தை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர். பிள்ளைகள் நம்பிக்கை தருவர். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. வியாபாரம் ஓரளவு லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
கும்பம்: சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
மீனம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரில் இருந்து உறவினர், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.