இன்றைய ராசிபலன்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் சுற்றியிருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் வளைந்து கொடுத்து போவர். உத்தியோகம் சிறக்கும்.

ரிஷபம்: ஆளுமைத் திறன் அதிகரிக்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். மாணவர்கள் உற்சாகமாக காணப்படுவர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். உங்களின் உதவியை நாடி பழைய நண்பர்கள் வருவர். தாயாரின் மருத்துவ செலவு குறையும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கடகம்: உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபம் விலகும். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். தந்தைவழி அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் உங்களின் அருமை புரியும்.

சிம்மம்: எதிர்பார்த்த உதவி கிட்டும். சாமர்த்தியமாக செயல்பட்டு சில பணிகளை முடிப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் கிடைக்கும்.

கன்னி: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். பணவரவு ஓரளவு உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டியதிருக்கும்.

துலாம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவார்.

விருச்சிகம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் தேடி வருவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் பணியை விரைந்து முடிப்பீர்.

தனுசு: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். தாயாரின் உடல்நிலை சீராகும். அரசால் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை சிறப்பாக முடிப்பீர். வியாபாரரீதியாக பிரபலங்களின் நட்பு கிட்டும்.

மகரம்: எதிர்பாராத சந்திப்பு நிகழும். பால்ய நண்பர்கள் உதவுவர். உடன்பிறந்தோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்த புது முயற்சிகள் எடுப்பீர். அலுவலகத்தில் வீண் விவாதம் வேண்டாம்.

கும்பம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு தேதி குறிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: சகோதர வகையில் வீண் செலவு, அலைச்சல் வரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பேசி பழகவும். அலு
வலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும்.

SCROLL FOR NEXT