இன்றைய ராசிபலன்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் மறையும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்ப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.

ரிஷபம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தம்பதிக்குள் சின்னச் சின்ன கருத்துமோதல் வரும். வியாபாரம், உத்தியோகத்தில் கவனம் தேவை.

மிதுனம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உத்தியோகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். பங்குதாரர்கள் ஆதரிப்பர்.

கடகம்: அடிமனதிலிருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். வீண் செலவுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். வாடிக்கையாளர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம்: எடுத்த வேலையை திறம்பட செய்து முடிப்பீர். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

கன்னி: கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வயிற்றுவலி, மூக்கடைப்பு நீங்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பர். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வீண் விவாதங்கள் விலகும். ஆடை, ஆபரணங்கள் சேரும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: பழைய நண்பர்கள் தேடி வருவர். குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர் மதிப்பார்கள்.

தனுசு: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவுகள் இருக்கும்.குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

மகரம்: பழைய வழக்குகளை இப்போது பேசித் தீர்ப்பீர். பண வரவால் மனநிம்மதியுண்டு. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் தொல்லை தந்த அதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வர்.

கும்பம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தைவழி உறவினர்களுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சிறக்கும்.

மீனம்: தள்ளிப் போய் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிக்கு நாள் குறிப்பீர். பணவரவுண்டு. முன்கோபம் தவிர்ப்பீர். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்துக் கொள்வீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

SCROLL FOR NEXT