இன்றைய ராசிபலன்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகத்தில் முக்கிய பிரமுகர்களின் நட்பு கிட்டும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பால் மனமகிழ்ச்சி அடைவீர். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவீர். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். அலுவலகரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு.

மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கூட்டுத் தொழில் வீண் விவாதம் நீங்கும். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் கிடைக்கும்.

கடகம்: விஐபிகளின் அறிமுகம் கிட்டும். வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினருடன் சென்று குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.

சிம்மம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர். புது வேலை கிடைக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும். நண்பர்கள் தேடி வருவர். தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவர். உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: உறவினர்கள், நண்பர்களால் வீண் செலவுகள் வரக்கூடும். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி தங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது.

துலாம்: பிரபலங்கள் சிலரை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வரும். வியாபாரத்தில் பணியாட்கள் உதவிகரமாக இருப்பர். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர். வியாபாரத்தால் விஐபிகள் அறிமுகமாவர். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும்.

தனுசு: திடீரென்று அறிமுகமாகும் சிலரால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் நிம்மதி தங்கும். உறவினர், நண்பர்கள் தேடி வருவர். இழுபறியாக இருந்த அரசு வேலை முடியும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். புது வேலை கிடைக்கும். பிள்ளைகளின் பாசமழையில் நனைவீர்கள். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் உண்டு.

கும்பம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். சில வேலைகளை போராடி முடிப்பீர். பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை மெல்ல மாறும். வாகனச் செலவு குறையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் மேலிடத்தில் புகார் கூற வேண்டாம்.

SCROLL FOR NEXT