பொதுப்பலன்: அழகு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க, பழைய நண்பர்களை சந்திக்க, சாதுக்களின் ஆசிர்வாதம் பெற, வழக்குகள் பேசிமுடிக்க, வெற்றிலை பயிரிட, குழந்தைக்கு பெயர் சூட்ட, அன்னம் ஊட்ட நல்ல நாள். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை அணிவித்தால் நன்மை உண்டு. நவகிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தடைகள் விலகும். சித்தர் சமாதியில் தியானம் செய்வதாலும், விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் மன அமைதி பெறலாம்.
மேஷம்: செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவர். பழைய வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும்.
ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவு படிப்படியாக குறையும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும்.
மிதுனம்: இழுபறியாக இருந்து வந்த வேலை முடியும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து கூடும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும்.
கடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.
சிம்மம்: வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். எதிலும் மகிழ்ச்சி கிட்டும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
கன்னி: அவசர முடிவுகளை தவிர்க்கப் பாருங்கள். வீண் விரயம், டென்ஷன் வரக் கூடும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். சகோதரர்கள் ஆதரவு தருவர்.
துலாம்: பணப் பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக்கும். குடும்பத்தினரால் மனநிம்மதி உண்டு. வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிலும் கவனம் தேவை. வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் தேடி வருவர். அரசு அதிகாரி
களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். வியாபாரத்தில் புது நபர்களின் வருகையுண்டு.
தனுசு: உடன்பிறந்தோர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர். வெளியூர் பயணம் ஏற்படும்.
மகரம்: புதிய வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தாருடன் முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். வீட்டை அழகுபடுத்துவீர். வியாபாரத்தில் லாபம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும்.
கும்பம்: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்து போவீர்கள். பிள்ளைகள் பொறுப்பு உணர்ந்து செயல்படுவார்கள். கைமாற்றாக வாங்கிய பணத்தை தந்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்.
மீனம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். அதிகாரிகள், சக ஊழியர்களை அனுசரித்து நடப்பது உங்களுக்கு நல்லது.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |