இன்றைய ராசிபலன்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

பொதுப்பலன்: திருமணம் செய்ய, வியாபாரம் தொடங்க, வரன் உறுதிப்படுத்த, புது பதவி ஏற்க, புத்தகம் வெளியிட நல்ல நாள்.
குருவின் அம்சமாகத் திகழும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், புத்தியில் தெளிவும், செயலில் திண்மையும் கிடைக்கப் பெறலாம். நவக்கிரக குரு பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபட்டால் தடைகள் விலகும். தட்சிணாமூர்த்தி அஷ்டோத்திரம், கந்த குரு கவசம், விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

மேஷம்: புதிய திட்டங்கள் மனதில் தோன்றும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

ரிஷபம்: பெரியளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்.

மிதுனம்: இரண்டு, மூன்று முயற்சிகளுக்குப் பிறகு சில காரியங்கள் முடியும். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போகவும். வீண் செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். மன உளைச்சல் உண்டு.

கடகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்குவீர். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். சோம்பல் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்.

சிம்மம்: பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர். தியானம், யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பணவரவு ஓரளவு திருப்தி தரும்.

கன்னி: நண்பர்கள், உறவினர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுக்காக வரன் தேடுவீர். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்.

துலாம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. வீண் டென்ஷன், குழப்பங்கள் நீங்கும். வாகனம் வாங்குவீர். மனைவிவழி உறவினர்களால் அனுகூலம் உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும்.

விருச்சிகம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும்.

தனுசு: தவிர்க்க முடியாத செலவுகள் வந்து போகும். நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தாமல் போய் விட்டோமே என்று ஆதங்கப்படுவீர். நெருங்கிய உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகமாகும்.

மகரம்: சமயோஜித புத்தியுடன் செயல்பட பாருங்கள். அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். நண்பர், உறவினர்கள் மத்தியில் மனஸ்தாபம் வந்து போகும். வீண் விவாதம் தவிர்க்கவும்.

கும்பம்: பணவரவால் வீட்டுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி தங்கும். தலைவலி, உடல் சோர்வு நீங்கும். தாய்வழி, மனைவிவழி சொந்தங்கள் தேடி வரும்.

மீனம்: பழைய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT