ஜோதிடம்

பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு பலன்கள்  2021 -2022; உத்திராடம்  நட்சத்திர அன்பர்களே! எதிர்ப்புகள் நீங்கும்; இல்லத்தில் மகிழ்ச்சி; எதிர்பார்த்த உதவி; பண வரவு உண்டு! 

செய்திப்பிரிவு


- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

உத்திராடம்:

கிரகநிலை:

ராகு பகவான் பதினொன்றாவது நட்சத்திரத்தின் 3ம் பாதம் - கேது பகவான் இருபத்தி ஐந்தாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் - சனி பகவான் இரண்டாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திலும் - குரு பகவான் மூன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.

கிரக மாற்றம்:

பிலவ ஆண்டு ஐப்பசி மாதம் 27ம் தேதி - 13.11.2021 - சனிக்கிழமை அன்று குரு பகவான் மூன்றாம் நட்சத்திரத்தின் 3ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று ராகு பகவான் பத்தாவது நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.
இந்த ஆண்டு பங்குனி மாதம் 07ம் தேதி - 21.03.2022 - திங்கட்கிழமை அன்று கேது பகவான் இருபத்தி மூன்றாம் நட்சத்திரத்தின் 1ம் பாதத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:

அழகாலும் அறிவாலும் அனைவரையும் அன்பில் ஆழ்த்தும் உத்திராட நட்சத்திர அன்பர்களே!

இந்த வருடத்தில் எதிர்ப்புகள் நீங்கும். நோய்களை நீக்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியைத் தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகப் பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களைச் செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.
கலைத்துறையினருக்கு பணவரவு அதிகப்படும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெறத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

+: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்
-: உங்கள் செயலில் மற்றவர்கள் குறை காணலாம்
மதிப்பெண்: 63%
வணங்க வேண்டிய தெய்வம்: சூரிய பகவானை வணங்கி வாருங்கள்.
**************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT