ஜோதிடம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். சிலரின் தவறான போக்கை எண்ணி வருந்துவீர்கள். நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முன்கோபத்தை கைவிடுங்கள்.

ரிஷபம்: பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: நீண்டகால கடனை பைசல் செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

கடகம்: தடைகள் நீங்கும். குடும்பத்தில் மதிப்பு உயரும். முன்கோபம் விலகும். எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள். அரசுப் பணிகள் சுமுகமாக முடியும். பணவரவு திருப்தி தரும்.

சிம்மம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு தேவையான அளவு இருக்கும். சகோதரர் வகையில் நன்மை பிறக்கும்.

கன்னி: சோம்பல், அசதி நீங்கும். தடைபட்ட வேலைகளை உடனே முடிப்பீர்கள். தேவையற்ற குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்: பல நாட்களாக இழுத்தடித்த காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். ஆடை ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்: ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுங்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து விலகும். பயணங்கள் அலைச்சல் தரும். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: நம்பிக்கைக்குரியவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.

மகரம்: பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.

கும்பம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மீனம்: வீடு, மனை, வாகனம் வாங்கும் காலம் கனிந்து வரும். தந்தைவழி உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தோற்றப் பொலிவு கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT