ஜோதிடம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்

உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அவர்கள் விரும்பிய துறையில் ஈடுபடுத்துவீர்கள்..

ரிஷபம்

புதிய நபர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.

மிதுனம்

மறைமுக எதிரிகளை இனம்கண்டு ஒதுக்குவீர்கள். உங்கள் தன்னடக்கத்தை அனைவரும் பாராட்டுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள், ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்

பிரபலங்களுடன் நட்பு ஏற்படும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் விறுவிறுப்பாக நடக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

சிம்மம்

மன உளைச்சல், டென்ஷன், சோர்வு, விரக்தி வந்துபோகும். முன்கோபத்தை குறையுங்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் உயரும்.

கன்னி

சிபாரிசு, ஜாமீன் கையெழுத்திடுவது போன்றவை வேண்டாம். வாகன வகையில் வீண் செலவு, அலைச்சல் ஏற்படும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். பணவரவு உண்டு.

துலாம்

உற்சாகம், புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். அவர்களது துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

விருச்சிகம்

விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பொருட்கள் சேரும்.

தனுசு

பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். ஆன்மிகம், தியானம், யோகா என மனம் செல்லும்.

மகரம்

ஒரே முயற்சியில் முடிகிற காரியங்கள்கூட பலமுறை அலைந்த பிறகே முடியும். உறவினர்கள், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

கும்பம்

இடையூறுகள், தடைகள் உடைபடும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்

அதிகாரிகளின் உதவியுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செலவை ஏற்படுத்தினாலும் புதிய அனுபவம், ஆதாயம் கிடைக்கும். காரியத்தில் நிதானம் தேவை.

************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT