ஜோதிடம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: சகோதரர்களுடன் எதிர்பாராத வகையில் மனவருத்தம் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். வாகனம் அடிக்கடி பழுதாகும். மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள்.

ரிஷபம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். நல்ல நண்பர்களின் அறிமுகம் உண்டு. புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்துவந்த வேலைகள் திடீரென முடியும். தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்பு, பதவி தேடி வரும்.

சிம்மம்: சோர்வு, களைப்பு நீங்கி புது முயற்சிகளில் உற்சாகமாக இறங்குவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவதும் லாபகரமாக முடியும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.

துலாம்: குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்றுமொழி பேசுபவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பணவரவு திருப்தி தரும்.

விருச்சிகம்: உடல் உஷ்ணத்தால் சில பிரச்சினைகள் ஏற்படக் கூடும். யாருக்கும், எதற்காகவும் உறுதியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

தனுசு: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

மகரம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களிடம் இருந்துவந்த பகை நீங்கும். உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணம் உண்டு.

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்பு, ஏமாற்றங்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

மீனம்: தைரியமாகவும், சாதுர்யமாகவும் சில முடிவுகள் எடுத்து வெற்றி பெறுவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக இருக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT