ஜோதிடம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்

அலைச்சல், செலவுகள் இருந்தாலும் சில ஆதாயங்களும் இருக்கும். நீங்கள் நல்லது சொல்லப்போய், சிலர் தவறாக புரிந்துகொள்வார்கள். உடல்நலத்தில் கவனம் தேவை.

ரிஷபம்

தடைகளை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.

மிதுனம்

புதிய நபர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். மகான்கள், பெரியவர்களை சந்திப்பீர்கள்.

கடகம்

பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். ஆன்மிகம், யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். காரியத்தில் நிதானம் தேவை.

சிம்மம்

உங்கள் பேச்சு, செயலில் வேகம் கூடும். பழைய வீட்டை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பணப் பற்றாக்குறை இருந்தாலும், சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பொருட்கள் சேரும்.

கன்னி

சவால்கள், போட்டிகள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மன அழுத்தம், மன இறுக்கம் நீங்கும். விஐபிகளின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு. வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும்.

துலாம்

தடைபட்ட வேலைகளை உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பேச்சில் பொறுமை அவசியம்.

விருச்சிகம்

மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். கோயில் காரியங்கள், விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

தனுசு

திடீர் பயணம், அலைச்சலால், சோர்வு, அசதியுடன் காணப்படுவீர்கள். அரசு, வங்கி விவகாரங்களில் அதிக கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் தேவையற்ற சங்கடங்கள் வந்து நீங்கும்.


மகரம்

பிரபலங்களுடன் அறிமுகம் கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். பங்குச் சந்தை வகையில் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள் தேடி வரும்.

கும்பம்

உறவினர் மத்தியில் மரியாதை, அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்தோடு கலந்துகொள்வீர்கள். உங்கள் நிர்வாகத் திறன் அதிகரிக்கும்.

மீனம்

நினைத்த காரியம் நிறைவேறும். கல்வியாளர்கள், அறிஞர்கள் நட்பால் தெளிவடைவீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT