ஜோதிடம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்

எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். நீண்டகாலமாக தடைபட்ட காரியங்களை உங்கள் பேச்சு சாதுர்யத்தால் முடிப்பீர்கள்.

ரிஷபம்

திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்

கையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.

கடகம்

வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தால் ஆதாயம், அனுகூலம் உண்டு.

சிம்மம்

உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். முடியாமல்போன சில காரியங்களை இன்று முடிப்பீர்கள். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை.

கன்னி

அடுத்தவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எல்லாவற்றுக்கும் மற்றவரையே குறை கூறாமல், உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். மாலை முதல் பிரச்சினைகள் விலகும்.

துலாம்

கணவன் - மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

விருச்சிகம்

வெளிப்படையாகப் பேசி, அனைவரையும் கவர்வீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

தனுசு

மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து கூடும். பணவரவு உண்டு.

மகரம்

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

கும்பம்

மறதியால் தேவையற்ற இடையூறுகள், பிரச்சினைகள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பயணத்தில் கவனம் தேவை. மாலை முதல் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்

கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். மாலை முதல் அலைச்சல் அதிகரிக்கும்.

*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT