ஜோதிடம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் தக்க சமயத்தில் உதவுவார்.

ரிஷபம்: வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. நல்ல நிறுவனத்தில் புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

மிதுனம்: பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்காலத்துக்கென சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வீர்கள்.

கடகம்: வீடு, மனை வாங்குவது, விற்பது சுலபமாக முடியும். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

சிம்மம்: தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். அடுத்தவர் மனம் காயப்படும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள்.

கன்னி: உறவினர், நண்பர்களுடன் கருத்துவேறுபாடுகள் வரக் கூடும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்துங்கள். திடீர் பயணம் உண்டு.

துலாம்: சமயோசிதமாகப் பேசும் சாமர்த்தியம் வரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் உதவுவார்கள்.

தனுசு: தள்ளிப்போன விஷயங்கள் முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சிலர் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகரம்: முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சிறு வார்த்தைகள்கூட பெரிய தகராறில் போய் முடியக் கூடும்.

கும்பம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர் வகையில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும்.

மீனம்: உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT