ஜோதிடம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். செலவுகளை குறைக்கத் திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். குடும்பத்தினர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சந்தேகத்தால் நல்லவர்களை இழப்பீர்கள்.

மிதுனம்: காரியங்களை போராடி வெல்வீர்கள். பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படும். உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். திடீர் பயணங்கள் உண்டு.

கடகம்: நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். கடன் தொகை வசூலாகும்.. எதையும் உற்சாகத்துடன் செய்வீர்கள். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

துலாம்: வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். யாரையும் முழுமையாக நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

விருச்சிகம்: தன்னம்பிக்கை பிறக்கும். உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

தனுசு: தொட்ட காரியங்கள் துலங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மகரம்: நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கும்பம்: எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாயாருடன் கருத்துவேறுபாடு வரும். பழைய கடனைத் தீர்க்கும் வழிகளை யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

மீனம்: சாதுர்யமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT