ஜோதிடம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும்.

ரிஷபம்: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: பிள்ளைகளால் நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்: எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். தாயார் ஆதரித்து பேசுவார். பழைய சொத்து பிரச்சினைகளில் ஒன்று தீரும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

துலாம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். பணவரவு உண்டு.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

தனுசு: பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்கும் எண்ணம் வரும்.

மகரம்: வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு.

கும்பம்: புதியவர்கள் நண்பர்களாவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும்.

மீனம்: முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் காட்டாதீர்கள். முன்கோபத்தால் இழப்புகள் ஏற்படும். மற்றவர் விவகாரங்களில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT