- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூராடம்:
கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு கோபப்பட்டாலும் அதை மனதில் கொள்ளாமல் அடுத்தவருக்கு உதவி செய்யும் பூராட நட்சத்திர அன்பர்களே!
நீங்கள் சுக்ர பகவானை நட்சத்திர நாயகனாகவும் குரு பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள்.
இந்த வருடம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் -மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துப் பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
பெண்களுக்கு : பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மனநிறைவு தரும்படி நடக்கும்.
கலைத்துறையினருக்கு : யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். சிலருடன் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
அரசியல்துறையினருக்கு : எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதை கழிப்பீர்கள். தொழில் சிறப்பான முன்னேற்றம் பெறும்.
மாணவர்களுக்கு : கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: மஹாலக்ஷ்மியை தீபம் ஏற்றி வணங்க, எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.
மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்திற்கு 69% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்
+: தன்னம்பிக்கை அதிகரிக்கும்
-: உங்கள் செயலில் மற்றவர்கள் குறை காணலாம்
****************************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |