ஜோதிடம்

2020 - புத்தாண்டு பலன்கள் ; சித்திரை நட்சத்திரத்துக்கான பலன்கள்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சித்திரை:

திறமையாக எந்த ஒரு காரியத்தையும் செய்து பாராட்டும், மதிப்பும், மரியாதையும் பெறும் சித்திரை நட்சத்திர அன்பர்களே!


நீங்கள் நேரத்தின் மதிப்பை அறிந்தவர். நீங்கள் செவ்வாய் பகவானை நட்சத்திர நாயகனாகவும், முதல் 2 பாதங்களுக்கு புதன் பகவானை ராசிநாதனாகவும், அடுத்த 2 பாதங்களுக்கு சுக்ர பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள்.


இந்த வருடம் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். குருவின் பார்வையால் அனைத்து தடைகளும் அகலும்.


தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்களின் செயல்கள் உங்களுக்குக் கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.


குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்øதைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை. குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.


பெண்களுக்கு : உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும்.


அரசியல்வாதிகள் : தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.


கலைத்துறையினர் : படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.


மாணவர்களுக்கு : கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் வாராஹிக்கு தீபம் ஏற்றி வணங்க பொருளாதாரச் சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.


மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்திற்கு 64% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்


+: புதிய முயற்சிகளில் வெற்றி


-: அடுத்தவர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்க்கவும்


*******************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT