- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ஹஸ்தம்:
எந்த காரியத்தை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்று மனதுக்குள் போடும் திட்டங்களை ரகசியமாக வைத்து காரியம் சாதிக்கும் திறமை பெற்ற ஹஸ்த நட்சத்திர அன்பர்களே!
நீங்கள் சந்திர பகவானை நட்சத்திர நாயகனாகவும், புத பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள்.
இந்த வருடம் பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள்.
பெண்களுக்கு : பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனமாக செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு : தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும்.
அரசியல்துறையினருக்கு : வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்களுக்கு : சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்களை கூறாமல் அனுசரித்துச் செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.
மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்திற்கு 68% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்
+: வீடு மனை தடைகள் அகலும்
-: வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை
************************************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |