ஜோதிடம்

2020 - புத்தாண்டு பலன்கள் ; பூரம் நட்சத்திரத்துக்கான பலன்கள்! 

செய்திப்பிரிவு

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பூரம்:


வீரத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய பூர நட்சத்திர அன்பர்களே!


நீங்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள். நீங்கள் சுக்ர பகவானை நட்சத்திர நாயகனாகவும், சூரிய பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள்.


இந்த வருடம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையைக் கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.

ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நன்மையைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. எடுத்து கொண்ட பணிகளில் இருந்து வந்த தொய்வு நீங்கும்.


குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு : திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையைக் கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.


கலைத்துறையினருக்கு : லாபங்கள் பெருகும். தடைபட்ட புதிய கடன்கள் இனி ஏற்படாது. இருக்கும் கடன் சுமையும் குறையும். வெளிநாடு செல்லும் திட்டம் வெற்றி பெறும். சம்பளம் உயரும். சிக்கல்கள் தோன்றினாலும் அதை வெற்றி கொள்ளும் திறன் உண்டாகும்.


அரசியல் துறையினர் : செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். சூரியன் பத்தாமிடத்தில் உலா வருகிறார். உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம்.


மாணவர்களுக்கு : கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.

பரிகாரம்: திருப்பாவை படித்து வருவதுடன் ஆண்டாள் தாயாரை வழிபாடு செய்து வர மனக் குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும்.


மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்திற்கு 75% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்


+: உறவுசிக்கல்கள் நீங்கும்


-: உடைமைகளில் கவனம் தேவை


******************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT