பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ஆயில்யம்:
திறமையையே மூலதனமாக வைத்து வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் செல்லும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே!
நீங்கள் புதன் பகவானை நட்சத்திர நாயகனாகவும் சந்திர பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள். நீங்கள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என விரும்புபவர்கள்.
இந்த வருடம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். எதிலும் துணிச்சலாக ஈடுபட முடியும். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுர்யமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தகத் திறமை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள்.
நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த பணம் கைக்கு வந்து சேரும்.
குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சினைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.
பெண்களுக்கு : துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை.
கலைத்துறையினருக்கு பயணத்தால் அனுகூலம் உண்டு. அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எந்த நேரத்திலும் கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.
அரசியல் துறையினருக்கு : உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
மாணவர்களுக்கு : திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
பரிகாரம்: நாகதேவதையை தினமும் 11 முறை வலம் வந்து வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பணக் கஷ்டம் குறையும்.
மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்திற்கு 60% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: புதிய தொழில் உத்தியோகம் அமையும்.
-: சொத்து சார்ந்த விஷயங்களில் முயற்சி தேவை.
******************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |