பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூசம்:
விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த பூச நட்சத்திர அன்பர்களே.
நீங்கள் சனி பகவானை நட்சத்திர நாயகனாகவும், சந்திர பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள். உங்கள் பேச்சில் வேகம் இருக்கும்.
இந்த வருடம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதையும் துணிச்சலாகச் செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அதிக உழைப்பின் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்த பணியிட மாற்றம் - பதவி உயர்வு தங்களைத் தேடி வரும்.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும். அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர் வழியில் உதவியை எதிர்பார்க்கலாம். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பெண்களுக்கு : எதிர்ப்புகள் நீங்கும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு : பாராட்டுகள் வரும். வெளிநாட்டுப் பயணங்களும் இனிதே அமையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நண்பர்களிடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை.
அரசியல் துறையினருக்கு : நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். எந்த விஷயத்திலும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள்.
மாணவர்களுக்கு : கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம் : செவ்வாய்க் கிழமையில் விரதம் இருந்து மாலையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிர்ப்புகள் விலகும்.
பிரச்சினைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.
மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்துக்கு 62% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்
+: வீடு மனை வாங்குவதிலான தடங்கல் நீங்கும்.
-: வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
******************************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |