பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ரோகிணி:
எதையும் ஆழமாக யோசித்து திறமையுடன் செய்து முடிக்கும் ரோகிணி நட்சத்திர அன்பர்களே. நீங்கள் சந்திர பகவானை நட்சத்திர நாயகனாகவும் சுக்ர பகவானை ராசி நாயகனாகவும் கொண்டவர்கள்.
நீங்கள் குடும்பத்தினரின் மீது அதிக பாசம் வைத்திருப்பவர்கள். இந்த வருடம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். ஆனால் தாமதமான பலனே கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக வந்து சேரும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தைரியம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாட்களாக தொழிலில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மை தரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாகப் பேசுவது குடும்ப அமைதியைத் தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகிச் செல்வது போல் இருக்கும். விட்டுப் பிடிப்பது நல்லது. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.
பெண்களுக்கு : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாற்றுக் கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு : நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.
அரசியல் துறையினருக்கு : வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரலாம்.
மாணவர்களுக்கு : எதையும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்துச் செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பரிகாரம் : கிருஷ்ணருக்கு பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களைப் போக்கும். மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.
மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்துக்கு 68% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்
+: பொருளாதாரத்தில் மேன்மை
-: எதிர்பாராத வெளியூர்ப் பயணம் ஏற்படலாம்
************************************************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |