ஜோதிடம்

2020 நட்சத்திரப் பலன்கள்; அஸ்வினிக்கு என்ன பலன்கள்?

செய்திப்பிரிவு


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அஸ்வினி:


எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய அஸ்வினி நட்சத்திர அன்பர்களே!


நீங்கள் கேது பகவானை நட்சத்திர நாயகனாகவும் செவ்வாய் பகவானை ராசி நாயகனாகவும் கொண்டவர்கள். நீங்கள் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். இந்த வருடம் ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரத்தால் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செயல் உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும்போது கவனம் தேவை.


தொழில் ஸ்தானத்திற்கு அதன் அதிபதி சனி வருகிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும்போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.


குடும்பஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்பச் செலவை சமாளிக்க போதிய பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.


பெண்களுக்கு : அடுத்தவரின் செயல்கள் உங்களது கோபத்தைத் தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல்படுவது நன்மையைத் தரும். எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் திறமை கூடும்.


கலைத்துறையினருக்கு : நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்டநாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் வரும்.


அரசியல் துறையினருக்கு : மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு அவசியம். எனவே, விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்களுக்கு : கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.


பரிகாரம் : மஹாகணபதியை வணங்க பிரச்சினைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.


மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்துக்கு 75% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


+: தன்னம்பிக்கை உயரும்.
-: குடும்பத்தில் முடிவெடுக்கும் போது கவனம் தேவை.

**********************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT