மேஷம்
புது வாகனம், நவீன ரக செல்போன் வாங்குவீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் பொறாமைப்படுவதை கண்டுகொள்ளாமல், உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்
எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். மன வலிமை அதிகரிக்கும். இழுபறியாக உள்ள பழைய பிரச்சினைகளுக்கு, வித்தியாசமான அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
மிதுனம்
சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து, சமயோசிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். வீடு, கடையை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். ஆன்மிக நாட்டம் கூடும்.
கடகம்
தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க நேரிடும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகள் வந்துபோகும். பணம் வாங்கித் தருவதில் யாருக்கும் குறுக்கே நிற்க வேண்டாம்.
சிம்மம்
எதிர்பாராத செலவுகள், வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் இருக்கும். பழைய நகையை மாற்றி, மனதுக்கு பிடித்த புது டிசைனில் வாங்குவீர்கள். பேச்சில் நிதானம் தேவை.
கன்னி
மனதில் நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. அலைச்சல் குறையும். புது வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம், அனுகூலம் உண்டு.
துலாம்
பேச்சில் கம்பீரம் பிறக்கும். வீண், ஆடம்பர செலவுகளை குறைத்து, பணத்தை சேமிப்பீர்கள். விஐபிகளுடன் சகஜமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும்.
விருச்சிகம்
எதிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்தோடு குலதெய்வக் கோயிலுக்கு சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
தனுசு
பழைய கடன் பற்றிய கவலைகள், பயம் வந்து நீங்கும். தண்ணீர், உணவு விஷயத்தில் கவனம் தேவை, புதிய நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். பணவரவு, பொருள் வரவு உண்டு.
மகரம்
உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் உங்களை கலந்துபேசி முக்கிய முடிவு எடுப்பார்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.
கும்பம்
எதையும் சமாளிக்கும் தைரியம், சாமர்த்தியம் பிறக்கும். பழைய கடனைத் தீர்க்க தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். நிலுவையில் இருந்த வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும்.
மீனம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |