மேஷம்
சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். மாலை முதல் தேவையற்ற அலைச்சலால், அசதி, சோர்வு உண்டாகும். பேச்சில் நிதானம் தேவை.
ரிஷபம்
இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய புது உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பணவரவு உண்டாகும்.
மிதுனம்
உங்கள் ஆற்றல், தொழில் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். வெளியூர் பயணங்களால் புது அனுபவம், ஆதாயம் கிடைக்கும்.
கடகம்
சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக பேசி முடிப்பீர்கள். தக்க சமயத்தில் விஐபிகள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
சிம்மம்
உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வரக்கூடும். வெளியூர் பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும். மாலை முதல் வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். எதிலும் நிதானம் தேவை.
கன்னி
தடைகள், இடையூறுகளைப் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாலை முதல் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
துலாம்
இனம்புரியாத அச்சம், வேதனை, வருத்தம் நீங்கி, நம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். எதிர்த்து நின்றவர்கள் மனம் திருந்தி வந்து, உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள்.
விருச்சிகம்
வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகள், விஐபிகளின் நட்பும், அதனால் ஆதாயமும் உண்டாகும். ஆன்மிக நாட்டம் கூடும்.
தனுசு
வாகன வசதி பெருகும். இழுபறியாக உள்ள பழைய பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வெளியூர் பயணத்தால் ஆதாயம், மகிழ்ச்சி உண்டு.
மகரம்
வாகனத்தை சரிசெய்வீர்கள். மனைவியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிலும் நிதானம் தேவை.
கும்பம்
எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் நம்பிக்கை, தைரியத்துடன் சமாளிப்பீர்கள். அவ்வப்போது பழைய இனிய சம்பவங்களை நினைத்துப் பார்த்து மகிழ்வீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும்.
மீனம்
எந்த சூழலிலும் பொறுமையை இழக்கக் கூடாது. உறவினர், நண்பர்களின் பேச்சு, செயல்பாடுகள் அதிருப்தி தரும். மாலை முதல் மகிழ்ச்சி தொடங்கும். பணவரவு, பொருள் வரவு உண்டு.
********
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |