மேஷம்: சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நன்கு பழக்கமில்லாத நபர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
ரிஷபம்: வீடு கட்டுவதற்கான வங்கிக் கடன் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தபந்தங்கள் உங்களை புரிந்து கொண்டு வலிய வந்து பேசுவார்கள். கலைப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்: புதிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கல்யாண முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். பணவரவு உண்டு.
கடகம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலர் வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புதிதாக மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
சிம்மம்: ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். பேச்சில் கடுமை காட்டாதீர்கள். சகோதரர்கள் கோபப்படுவார்கள். வழக்கால் நிம்மதி இழக்கக் கூடும்.
கன்னி: உறவினர்கள், நண்பர்களுக்கு மத்தியில் தான் தனித்துவமாகத் தெரிய வேண்டுமென எண்ணுவீர்கள். நெருங்கிய நண்பர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள்.
துலாம்: தந்தைவழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் சுமுக முடிவு கிடைக்கும். உறவினர், நண்பர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு விலகும்.
விருச்சிகம்: தடைகள் நீங்கும். மனைவியின் ஆரோக்கியம் சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். திடீர் பயணம் உண்டு.
தனுசு புதிய கோணத்தில் செயல்பட்டு பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் முன்னேற்றம் தெரியும். விருந்தினர் வருகை உண்டு.
மகரம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். அரசியல் கட்சி பிரமுகரின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாட்களாக எதி்ர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
கும்பம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன ரக மின் சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள்.
மீனம்: தூக்கம் குறையும். பழைய கசப்பான சம்பவத்தை நினைத்து வருந்துவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் வாக்குவாதம் வந்து போகும். மற்றவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |