பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரகநிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு இருபத்தி மூன்றாவது நட்சத்திரத்தில் இருந்து இருபத்தி நான்காவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்:
அனுபவ அறிவையும் செயல்திறனையும் பெற்ற அவிட்டம் நட்சத்திர அன்பர்களே.
உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த குருப்பெயர்ச்சியால் செலவு அதிகரிக்கும். அடுத்தவரால் மனசங்கடம் உண்டாகும்.
வாகனங்கள் பயன்படுத்தும்போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு : அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதைத் தவிர்ப்பது நல்லது.
கலைத்துறையினருக்கு : சக கலைஞர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். ஒப்பந்தங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.
அரசியல் துறையினருக்கு : திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும்.
பெண்களுக்கு : அடுத்தவருக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. வீண் மனச் சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்.
மாணவர்களுக்கு : பாடங்களைப் படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.
பரிகாரம்: பைரவருக்கு தேங்காய் உடைத்து வழிபட, எல்லா சிக்கல்களும் தீரும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
மதிப்பெண்கள்: 62% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
-: மாற்றுக் கருத்து உண்டாகும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |