பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரகநிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்தில் இருந்து இருபத்தி ஆறாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்:
அதிக உழைப்பு இல்லாமல் திறமையைக் கொண்டே முன்னேறும் உத்திராடம் நட்சத்திர அன்பர்களே.
இந்த குருப் பெயர்ச்சியால் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சினை தீரும். தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம், கவனம் தேவை.
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். திருமணக் காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சினை தீரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு : வேலைப் பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.
கலைத்துறையினருக்கு : பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.
அரசியல் துறையினருக்கு : தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.
பெண்களுக்கு : எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.
மாணவர்களுக்கு : கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
பரிகாரம்: சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். பண பிரச்சினை தீரும். குடும்ப நன்மை ஏற்படும்.
மதிப்பெண்கள்: 59% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: எதையும் சமாளிப்பீர்கள்.
-: அருகில் இருப்பவர்களுடன் சச்சரவு வரலாம்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |