ஜோதிடம்

குருப்பெயர்ச்சி : மூலம் நட்சத்திரப் பலன்கள்

செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கிரகநிலை:


குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு இருபத்தி ஏழாவது நட்சத்திரத்தில் இருந்து உங்கள்
நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.


பலன்:


எளிதில் மற்றவரை கவரும் வகையில் திறமையாக செயல்படும் மூலம் நட்சத்திர அன்பர்களே.


இந்த குருப் பெயர்ச்சியால் காரியங்களில் தடைதாமதம் ஏற்படலாம். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.


குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.


தொழில் வியாபாரத்தில் புத்தி சாதுர்யத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்ப்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும்.


கலைத்துறையினருக்கு : எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.


அரசியல்துறையினருக்கு: மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்.


பெண்களுக்கு : எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும்.


மாணவர்களுக்கு : கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திட்டமிட்டபடி பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.


பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காரிய அனுகூலம் உண்டாகும்.


மதிப்பெண்கள்: 65% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


+: முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
-: மற்றவர்களின் பொறாமை அதிகரிக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT