ஜோதிடம்

குருப்பெயர்ச்சி : அனுஷம் நட்சத்திரப் பலன்கள்

செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கிரகநிலை:

குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு இரண்டாவது நட்சத்திரத்தில் இருந்து மூன்றாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.

பலன்கள் :

போராட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் வெற்றியையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அனுஷம் நட்சத்திர அன்பர்களே.

இந்த குருபெயர்ச்சியில், எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கிச் சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலைப் பளுவும் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு : ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு : எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.

பெண்களுக்கு : மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எதிலும் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. பணத் தேவை உண்டாகும்.

மாணவர்களுக்கு : கல்வி பற்றிய பயத்தை விலக்கி விட்டு ஆர்வமாகப் படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர காரியத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

மதிப்பெண்கள்: 73% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

+: உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

-: செலவு கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT