பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரகநிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு மூன்றாவது நட்சத்திரத்தில் இருந்து நான்காவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்:
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பக்குவமாக காரியங்களை சாதிக்கும் விசாக நட்சத்திர அன்பர்களே.
இந்த குருப் பெயர்ச்சியால் எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். லாபம் அதிகரிக்கும். தேவையான பண உதவியும் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
கலைத்துறையினருக்கு : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
அரசியல் துறையினருக்கு : ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.மேலிடத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு : எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும்.
மாணவர்களுக்கு: கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.
பரிகாரம்: முருகனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
மதிப்பெண்கள்: 65% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
-: மன அமைதி குறையும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |