பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரகநிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு நான்காவது நட்சத்திரத்தில் இருந்து ஐந்தாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்:
தோல்வியை வெற்றிப் படிகளாக ஆக்கிக் கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் திறமை உடைய சுவாதி நட்சத்திர அன்பர்களே.
இந்த குருப்பெயர்ச்சியால் வீண் மனக்கவலை ஏற்படலாம். கனவுத் தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.
தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு : இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். செலவுகள் குறையும். உடன் பணிபுரிவோர் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.
அரசியல் துறையினருக்கு : நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். சக தோழர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும்.
பெண்களுக்கு : வீண் மனக்கவலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவு கூடும்.
மாணவர்களுக்கு : உயர்கல்வி பற்றிய கவலை நீங்கும். ஆனால் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: நரசிம்மரை சேவித்து வர மனக்குழப்பம் நீங்கும். செல்வ நிலை உயரும்.
மதிப்பெண்கள்: 64% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: மனக்கவலை நீங்கும்.
-: வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |