ஜோதிடம்

குருப்பெயர்ச்சி :   சித்திரை  நட்சத்திரப் பலன்கள்

செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கிரகநிலை:


குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு ஐந்தாவது நட்சத்திரத்தில் இருந்து ஆறாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.


பலன்:


வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் தன்மை உடைய சித்திரை நட்சத்திர அன்பர்களே.


இந்த குருப்பெயர்ச்சியால் நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது.


குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவீர்கள். அவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும் போது நிதானம் தேவை.


தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும்.


உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள்.


கலைத்துறையினருக்கு : எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.


அரசியல்துறையினருக்கு : உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும்.


பெண்களுக்கு : வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும்.
மாணவர்களுக்கு : திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும்.


பரிகாரம்: சுப்ரமணிய புஜங்கம் சொல்லி முருகப்பெருமானை வணங்கி வருவது பொருளாதார நிலையை உயர்த்தும்.
மதிப்பெண்கள்: 74% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.


+: மற்றவர்களிடம் அன்பாக இருப்பீர்கள்.
-: உடல் சோர்வு வரலாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT