ஜோதிடம்

குருப்பெயர்ச்சி : பூசம் நட்சத்திரப் பலன்கள்

செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கிரகநிலை:

குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு பதினொன்றாவது நட்சத்திரத்தில் இருந்து பனிரெண்டாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.

பலன்:

நியாயத்தின் பக்கம் நிற்கும் பூசம் நட்சத்திர அன்பர்களே.

நீங்கள் அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர். இந்த குருப்பெயர்ச்சியால் பேச்சுத் திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதைக் குறைப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துப் பேசுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவு ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு மற்றும் உடல்சோர்வு உண்டாகலாம்.

தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது.

பெண்களுக்கு : பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி நடக்கும்.

அரசியல் துறையினருக்கு : இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனக் கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு : கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு : கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கஷ்டங்களைப் போக்கி மனதில் நிம்மதியைத் தரும்.

மதிப்பெண்கள்: 72% . நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

+: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

-: எதிலும் கூடுதல் உழைப்பு தேவைப்படும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT