பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரகநிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு பதினேழாவது நட்சத்திரத்தில் இருந்து பதினெட்டாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்:
இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடைய பரணி நட்சத்திர அன்பர்களே. கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என நினைப்பவர் நீங்கள். இந்த குரு பெயர்ச்சியால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள், எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும்போது கவனமாகப் பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும்.
பெண்களுக்கு : எதைப்பற்றியாவது நினைத்து கவலைபடுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும்போது கவனம் தேவை. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
கலைத்துறையினருக்கு : மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும்.
அரசியல் துறையினருக்கு : சிறிய வேலையைச் செய்து முடிப்பதற்கே கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
மாணவர்களுக்கு : கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: பவுர்ணமியில் பூஜை செய்து மஹாலக்ஷ்மியை வணங்க எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். மனக்கவலை நீங்கும்.
மதிப்பெண்கள்: 85% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: பணவரவு நன்றாக இருக்கும்.
-: தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |