ஜோதிடம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். தொண்டை புகைச்சல், கழுத்து வலி ஏற்படக் கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது.

ரிஷபம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் குதூகலம் காணப்படும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். நீண்ட நாட்களுக்குப் பின் உறவினர்களின் வீட்டுக்குச் செல்வீர்கள்.

கடகம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

சிம்மம்: அரசு காரியங்கள் தடையின்றி விரைந்து முடியும். பூர்வீக சொத்தை விற்று சில பிரச்சினைகளிலிருந்து வெளி வருவீர்கள். மனைவிவழி உறவினர்களின் ஆதரவு கிட்டும்.

கன்னி: பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். நல்ல வேலை கிடைக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்.

துலாம்: அனுபவ அறிவால் பல காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

விருச்சிகம்: படபடப்பு, ஒற்றை தலைவலி, வீண் அலைச்சல், உறவினர் பகை வந்து நீங்கும். அரசு விவகாரங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். உடல் உஷ்ணம் அதிகரிக்கக் கூடும்.

தனுசு: குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். சகோதரரின் செயல்பாடு உங்களுக்கு மனவருத்தத்தைத் தரும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.

மகரம்: வேற்றுமொழி பேசுபவர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்: அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தார் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

மீனம்: எதிலும் வெற்றி கிட்டும். சகோதரருடனான பகை, முன்கோபம் விலகும். நண்பர்கள், உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT