மியூசிக் அகாடமி, டிசம்பர் மாத இசைவிழா மட்டுமின்றி, தியாக ராஜர் ஆராதனை, முத்துசுவாமி தீட்சிதர் ஜெயந்தி, சியாமா சாஸ் திரி தினம், அன்னமாச்சார்யா ஜெயந்தி, இளம் கலைஞர்களுக் கான தொடர் நிகழ்ச்சி என்று பல நிகழ்ச்சிகளை ஆண்டு முழு வதும் நடத்தி வருகிறது.
சென்னை மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழாவில் விதூஷி எஸ்.சௌமியாவின் கச்சேரி நடை பெற்றது. அவருக்கு பக்கபலமாக எம்பார் எஸ்.கண்ணன் (வய லின்), நெய்வேலி ஆர்.நாராய ணன் (மிருதங்கம்). உடுப்பி எஸ்.ஸ்ரீதர் (கடம்) இருந்தனர்.
மகா கணபதே பாலயாசு என தொடங்கும் நடநாராயணி ராகத் தில் அமைந்த முத்துசுவாமி தீட்சி தரின் க்ருதியுடன் கச்சேரியைத் தொடங்கினார் சௌமியா. அடுத்த தாக, பொன்னையா பிள்ளையின் மாயாமாளவ கௌளை ராகத்தில் அமைந்த 'மாயா தீர்த்த ஸ்வரூ பிணி எனத் தொடங்கும்பாடலைப் பாடினார். சிறிய பைரவிராக ஆலா பனைக்குப் பிறகு, முத்துசுவாமி தீட்சிதரின் சிந்தய மா கந்த மூலகந் தம்' எனத் தொடங்கும் க்ருதியைப் பாடிய சௌமியா. ‘உத்துங்க கம நீய விர்சதுரங்கம் பைரவி பிரசங் கம்' என்ற வரியில் நிரவல் செய்து ஸ்வரக் கோர்வைகளை பாடினார்.
அடுத்ததாக, தியாகராஜ சுவாமியின் கேசரி (சிந்து கன்னட) ராக கீர்த்தனை (நன்னு கன்ன தல்லிநாபாக்யமா), பாபநாசம்சிவ னின் சண்முகப்ரியா ராகப் பாடல் (ஆண்டவனே) ஆகியவற்றைப் பாடினார். பிரதான ராகமாக ஜஞ் ஜூடி அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனைக்குப் பிறகு, முத்து சுவாமி தீட்சிதரின் 'கஜாம்பா நாயகோ ரக்ஷது என்ற க்ருதியை பாடினார். 'ஸுஜஞ்ஜூடி ராக பான ஸுந்தர குருகுஹ ஸிவஸூனு' என்ற வரியில் நிரவல் செய்து ஸ்வரக் கோர்வைகளை பாடினார்.
தியாகராஜ சுவாமியின் சாரங்கா ராகக் கீர்த்தனைக்கு (எந்த பாக் யமு) பிறகு, ராகம் தானம் பல்ல விக்கு சென்றார் சௌமியா. ஆஹிரி ராகத்தில் விஸ்தாரமான ஆலாபனைக்குப் பின்னர், 'மாமோக லாஹிரி கொண்டேன் சகியே இவ்வேளையில்' என்ற பல்லவியை கண்ட ஜாதி ஜம்பை தாளத்தில் பாடினார்.
தனி ஆவர்த் தனத்தில் நெய்வேலி நாராயணனும், உடுப்பி ஸ்ரீதரும் மிகக் கச்சித மான கோர்வைகளைக் கொண்டு ரசிகர்களை ஈர்த்தனர். பாடகரை வயலினில் தொடர்ந்து வந்த எம் பார் கண்ணன், பிரதான ராகம் மற் றும் ராகம் தானம் பல்லவியின் ஆலாபனையில் தனக்கென அமைத்துக் கொண்ட பாணியில் வாசித்து பாராட்டைப் பெற்றார்.
கனம் கிருஷ்ணய்யரின் பந்து வராளி ராகப் பதம் (நித்திரையில் சொப்பனத்தில்), சதாசிவ பிரம்மேந் திரரின் பீலு ராகப் பாடல் (பஜரே யதுநாதம்), அண்ணாமலை ரெட்டி யாரின் காவடிச்சிந்து பாடலுடன் கச் சேரியை நிறைவு செய்தார் சௌமியா.
தனது தந்தை சீனிவாசன், வித்வான் எஸ்.ராமனாதன், விதூஷி டி.முக்தாவிடம் இசை பயின்ற எஸ்.சௌமியா, தற்போது தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண் கலை பல்கலைக் கழக துணை வேந்தராக உள்ளார்.