கலை

‘காபி’யில் கவர்ந்த குருவும் சிஷ்யையும் | இசை அரங்கம்

கே.சுந்தரராமன்

ஒவ்வொரு இசைக் கலைஞரும் தன்னைமெருகேற்றிக் கொள்ள, தகுந்த குரு கிடைக்க வேண்டும். அவ்வகையில், விதூஷி அமிர்தா முரளி அதிர்ஷ்டசாலி. அதுவும், குருவே அவருக்கு வயலின் வாசிக்கும் பேறு கிடைத்துள்ளது.

சென்னை மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழாவில் இளம் கலைஞர் அமிர்தா முரளியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. கச்சேரியில் அவருக்கு பக் கபலமாக ஆர்.கே.ஸ்ரீராம்குமார் (வயலின்), என்.மனோஜ் சிவா (மிருதங்கம்). சி.பி.வியாஸவிட்டலா (கஞ்சிரா) இருந்தனர்.

சிருங்கேரி ஆச்சாரியர் மீது குரு ஸ்லோகம், முத்து சுவாமி தீட்சிதரின் அடாணா ராகத்தில் அமைந்த 'பிரஹஸ்பதே தாரா பதே க்ருதியுடன் கச்சேரியைத்து விஜாவந்தி ராகத்தில் அமைந்த முத்துசுவாமி தீட்சிதர் க்ருதி (சேதஸ்ரீ பாலகிருஷ்ணம்), தியாகராஜ சுவாமியின் மஞ்சரி ராககீர்த்தனை (பட்டிவிடுவராது) ஆகியவற்றைப் பாடினார்.

கச்சேரியின் பிரதான ராகமாக காம்போஜி அமைந்தது. விஸ் தாரமான ஆலாபனையுடன் தொடங்கி, முத்துசுவாமி தீட் சிதரின் 'ஸ்ரீவன்மீகலிங்கம் சிந்தயே க்ருதியைப் பாடினார். 'சங்கரம் சோமகுலாம்பிகா அம்போஜ மதுகரம்' என்ற வரியில்நிர வல் செய்து, ஸ்வரக் கோர்வை களுடன் பாடினார். பின்னர் ராகம் தானம் பல்லவிக்கு, மிஸ்ர ஜாதி திரிபுட தாளத்தில் அமைந்த ஆர்.கே.ஸ்ரீராம்குமாரின் 'கருணாத்மிகா விநாகதரப்ரியா மாம்பாது சர்வதா கமலாம்பிகா' என்ற காபி ராகப் பல்லவியைத் தேர்வு செய்தார் அமிர்தா.

ராக மாலிகையாக காபி (தீட்சிதர் பாடாந்திரம்), தேவக்ரியா, சரஸ் வதி மனோஹரி, கலாவதி, ரீதி கௌளைஸ்வரங்களை குருவும் சிஷ்யையும் மாறி மாறி வெளிப் படுத்திய விதம் அருமை. தாயு மான சுவாமி அருளிய சின்மயானந்த குரு பாடல், 'குமர குருபர முருக சரவணகுக' எனத்தொடங்கும் அருணகிரி நாதர் திருப்புகழுடன் கச்சேரியை நிறைவு செய்தார் அமிர்தா.

சிறுவயதில், வயலின் மேதை டிருக்மிணியிடம் வயலின்கற்கத் தொடங்கிய அமிர்தா, விதூஷி ரமா ரவி, வித்வான் பி.எஸ். நாராயண சுவாமியிடம் இசை பயின்றார். தற்போது, சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.கே.ஸ்ரீராம் குமாரிடம் இசை பயின்று வருகிறார்.

SCROLL FOR NEXT