ஏடிஎம்-ல் பணம் எடுத்த பிறகு நமது வங்கிக் கணக்கில் மீதமி ருக்கும் தொகை, எடுக்கப்பட்ட தொகை உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய சீட்டு அச்சாகி வரும். தற்போது தேர்தல் ஆணையத் தின் உத்தரவின் படி, ஒரு சில வங்கி ஏடிஎம்-களில், அந்த சீட் டில் விழிப்புணர்வு செய்திகள் ஆங்கிலத்தில் அச்சாகி வரு கின்றன.
அடையார் பகுதியில் உள்ள ஒரு வங்கி ஏடிஎம்-ல் வாக்காளர் விழிப்புணர்வு செய்திகளாக ‘நோட்டுக்காக ஓட்டு அல்ல’, ‘உங்கள் வாக்கை விற்காதீர்கள்’, ’உங்கள் வாக்கு உங்கள் உரிமை’ என்ற வாசகங்கள் அச்சாகி வருகின்றன.
இதுகுறித்து இந்தியன் ஓவர் சீஸ் வங்கி அதிகாரி ஒருவர் கூறு கையில், “எங்களுக்கு தேர்தல் ஆணையத்தின் உத்தரவு கிடைத்தால், இந்த செய்திகளை ஏடிஎம் திரையிலும், சீட்டிலும் வெளியிடுவோம்.
இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம்-களிலும், கடைசி கட்ட தேர்தல் முடியும் வரை இந்த செய்திகள் வெளியாகும்” என்றார்.