மற்றவை

காங்கிரஸின் விரோத செயலை கருணாநிதி ஏற்றுக்கொள்கிறாரா?- ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

செய்திப்பிரிவு

தென்காசி மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொ.லிங்கத்தை ஆதரித்து, திருவில்லிபுத்தூரில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்த ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

பாஜக தேர்தல் அறிக்கையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமையான பாபர் மசூதியை இடித்துவிட்டு, 22 ஆண்டுகளுக்குப் பின்னரும் கோயில் கட்டப் போவதாக அறிவித்துள்ளார்கள். தற்போது மீண்டும் தேர்தல் அறிக்கையில் அயோத்தியை குறிப்பிட்டுள்ளது மத வெறியை உருவாக்கும் செயல்.

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அவரது படத்துக்கு மோடி மாலை அணிவித்துள்ளார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து, பாஜக தேர்தல் அறிக்கையில் இல்லை. காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் திமுக. இடம் பெற்றிருந்தது. கடைசி 6 மாதம் வெளியே வந்தவர்கள் இப்போது, ’காங்கிரஸ் மன்னிப்புக் கேட்டால் தேர்தலில் ஆதரவு அளிப்போம்’ என்கிறார் கருணாநிதி.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து மக்கள் விரோத செயல்களையும் கருணாநிதி ஏற்றுக்கொள்கிறாரா? எனக் கேள்வி எழுப்பினார் ஜி. ராமகிருஷ்ணன்.

SCROLL FOR NEXT