்மைக் ஆனில் இருக்கும்போது பணத்தைப் பற்றி பேசலாமா? என பாஜக வேட்பாளரிடம் பாபா ராம்தேவ் கண்டித்தது மைக்ரோ போன் மூலம் அம்பலமானது.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் தொகுதியில் பாஜக சார்பில் மகந்த் சந்த்நாத் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து யோகா குரு ராம்தேவ் கடந்த வியாழக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக ஆல்வார் நகரில் இருவரும் நிருபர்களுக்கு பேட்டி யளித்தனர். பேட்டி தொடங்கு வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பாஜக வேட்பாளர் மகந்த் சந்த்நாத், ராம்தேவின் காதில் மெதுவாக கிசுகிசுத்தார்.
இருவரின் உரையாடல் நிரு பர்கள் சந்திப்புக்காக ஏற் பாடு செய்யப்பட்டிருந்த மைக்ரோ போனில் தெளிவாகப் பதிவானது.
“தேர்தலுக்காக பணத்தை திரட்டுவதும் அதனை தொகுதிக்கு கொண்டு வருவதும் மிகவும் சிரமமாக உள்ளது” என்று ராம் தேவிடம் வேட்பாளர் மகந்த் சந்த் நாத் மெதுவாகக் கூறினார்.
அவருக்குப் பதிலளித்த ராம்தேவ், “நீங்கள் ஒரு முட்டாளா? நிருபர்கள் சந்திப்பின்போது பண விவகாரத்தைப் பேசலாமா?’’ என்று முகத்தில் கோபத்தை வெளிப் படுத்தாமல் கடிந்து கொண்டார். இருவரின் உரையாடல்களும் நிருபர்களின் மைக்ரோபோனில் பதிவானது. இதுகுறித்து சந்த் நாத்திடம் கேட்டபோது, ராம் தேவிடம் இதுபோன்ற எதுவும் பேச வில்லை என்று மறுத்தார்.
கைது செய்ய காங். கோரிக்கை
“வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வது தொடர் பாகவே சந்த்நாத்தும் ராம்தேவும் பேசியுள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும்” என்று காங்கிரஸ் சட்டப் பிரிவு செயலாளர் கே.சி. மிட்டல் கேட்டுக் கொண்டுள்ளார்.