மக்களவைத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களில் சிங் என்ற பெயரைக் கொண்டவர்களே அதிகம் உள்ளனர். மொத்த வேட்பாளர்களில் 218 பேர் தங்கள் பெயரில் சிங் என்பதை ஒரு பகுதியாகக் கொண்டுள்ளனர்.
இதில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களில் சுமார் 50 பேர் சிங் என்ற பெயரை உடையவர்கள். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களில் 30 பேர் சிங் என்பதை தங்கள் பெயரின் ஒருபகுதியாகக் கொண்டுள்ளனர்.
சமாஜ்வாதி கட்சியில் 15 பேரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றில் சுமார் 5 முதல் 10 வேட்பாளர்களும் சிங் என்ற பெயருடையவர்கள்.
சிங் என்ற பெயருக்கு அடுத்த படியாக குமார் என்ற பெயரை தங்கள் பெயரின் ஒருபகுதியாக கொண்டுள்ள வேட்பாளர்கள் அதிகம் உள்ளனர். ஆம் ஆத்மியில் மட்டும் மொத்தம் 42 குமார்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். காங்கிரஸில் 23 பேரும், பாஜகவில் 15 பேரும் குமார் என்ற பெயரைக் கொண்டு ள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக யாதவ் என்ற பெயரை துணைப் பெயராகக் கொண்ட வேட்பாளர்கள் அதிகம் உள்ளனர். கான், அலி போன்றவற்றை தங்கள் பெயரில் உடைய வேட் பாளர்கள் குறைவு.
அஜய், சஞ்சய், அசோக், சலீம், அப்துல் ஆகிய பெயர் களை உடையவர்களும் அதிகம் உள்ளனர்.
சிங் மற்றும் குமார் ஆகிய பெயருடைய எம்பிக்கள் தான் இப்போதைய நாடாளு மன்றத்திலும் அதிகம் உள்ளனர். இப்போதைய மக்களவையில் சிங் என பெயர் கொண்டவர்கள் 72 பேர். குமார் என்ற பெயருடையவர்கள் 41 பேர். 25 ராம்களும் 12 யாதவ்களும் மக்களவையில் உள்ளனர்.
பெயருக்கு முன்பு டாக்டர் என்ற பட்டத்தை வைத்துள்ள வேட்பாளர்கள் முக்கியக் கட்சிக ளில்தான் அதிகம் உள்ளனர். இதில் அதிபட்சமாக பாஜகவில் சுமார் 30 பேர் தங்கள் பெயருக்கு முன்பு டாக்டர் என்ற பட்டத்தை வைத்துள்ளனர்.