அ. மோகன்ராஜ் - மாவட்டச் செயலர், சி.பி.ஐ.
மாவட்டத்தின் பாரம்பரியத் தொழில்களான விவசாயம், மீன்பிடிப்பு, உப்பளம், தீப்பெட்டி ஆகிய தொழில்கள் நசிவடைந்துவிட்டன. மாறாக, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழில்கள் பெருகிவிட்டன. சுற்றுச்சூழல் மாசு அடைவதைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. உள்ளூர்ப் பிரச்சினைகள் பல தீர்க்கப்படாமல் தொடர்கின்றன. ரயில் வசதிகள் போதுமானதாக இல்லை.
பாத்திமா பாபு - அமைப்பாளர், வீராங்கனை பெண்கள் அமைப்பு.
தூத்துக்குடி நகரம் தனது தாங்கும் சக்தியைத் தாண்டி மாசுபட்டுவருகிறது. நகரத்தின் வளர்ச்சிக்குத் தொழிற்சாலைகள் தேவைதான். ஆனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இனியாவது மாசு ஏற்படுத்தாத மீன்பிடிப்பு, உப்பு, விவசாயம் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த வேண்டும். வளர்ச்சியை நோக்கித் திட்டமிட்டு, தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.