மற்றவை

சென்னையில் வாக்குப்பதிவை கண்காணிக்க 1,920 வெப் கேமராக்கள்

செய்திப்பிரிவு

சென்னையில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,920 வெப்கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலுக்காக, சென்னையில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் 3,254 பிரதான வாக்குச் சாவடிகள், 84 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 255 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகள் எனவும், 28 வாக்குச் சாவடிகள் மிக வும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. அதோடு போலீஸ் கண்காணிப்பு மற்றும் முந்தைய தேர்தலின் போது நடந்த அசம்பா விதங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 1600க்கும் மேற் பட்ட கவனிக்கத்தக்க வாக்குச் சாவடிகளும் கண்டறியப்பட்டுள் ளன. இந்த வாக்குச் சாவடிகளை கண்காணிக்க 1,920 வெப் கேம ராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதில், 1280 வாக்குச் சாவடிகளில் அமைக்கப்பட உள்ள வெப் கேமரா மூலம், மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிகளை கண் காணிக்க முடியும் என மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரம் தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT