நாள்தோறும் உருவாகும் கட்சிகளை புறக்கணியுங்கள் என விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வியாழக்கிழமை நடந்த திமுக பொதுகூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பில் வியாழக் கிழமை பிற்பகல் நடந்த பொதுக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமையேற்றார். திமுக வேட்பாளர்கள் விழுப்புரம் முத்தையன், கள்ளக்குறிச்சி மணி மாறன், ஆரணி சிவாநந்தம் ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது:
நாட்டை யார் ஆளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது என்பதை உணர்ந்து நீங்கள் கடமையாற்றவேண்டும். மதசார் பற்ற ஆட்சி அமையவேண்டும் என்ற முடிவை எடுத்து நாங்களும் கூட்டணி கட்சிகளும் அந்த தீர்மான முடிவை நிறைவேற்ற உங்களை சந்திக்க வந்துள்ளோம். தமிழ்நாட்டில் நாள்தோறும் உருவாகும் கட்சிகள் தங்களை பெரிதாக காட்டிக்கொள்கின்றன. அவர்களை பொருட்படுத்தாமல் புறக்கணித்து, சட்டை செய்யா மல், அலட்சியப்படுத்த வேண்டும். உங்கள் உழைப்பை மதித்து, பயன்படக்கூடிய பலதிட்டங்களை செயல்படுத்தி, பாடுபடும் ஒரே கட்சி திமுக. இதை மனதில் வைத்து திமுக வெற்றிக்கும், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.