வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., வீரன் சுந்தரலிங்கனார், மாவீரன் வெள்ளையத் தேவன், பாரதியார் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகளை நாட்டுக்குத் தந்த பெருமை மிக்க தொகுதி தூத்துக்குடி. முத்துக்குளித்தலில் சிறந்து விளங்கியதால், முத்துநகர் என்ற பெயரும் தூத்துக்குடிக்கு உண்டு. கடல் வாணிபத்தில் கொடிகட்டிப் பறக்கும் தூத்துக்குடி துறைமுகம், உலக அளவிலான முன்னணித் துறைமுகங்களில் ஒன்று.