நாகப்பட்டினம் வட்டத்தில் நாகை, திருமருகல் ஆகிய ஒன்றியங்களை உள்ளடக்கியது நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி. நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி பேரூராட்சி என ஒரு பேரூராட்சியும், ஒரு நகராட்சியும் உள்ளன. இதுதவிர இஸ்லாமியர்களின் மிக முக்கிய தலமான நாகூர், இந்துக்களின் முக்கிய தலமான சிக்கல் ஆகியவையும் இந்த சட்டமன்ற தொகுதியில் உள்ளன.
தொகுதியில் மீன்பிடித் தொழிலே பிரதானமாக விளங்குகிறது. ஆனால் அதற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த பெரிய அளவில் பணீகள் எதுவும் இங்கு நடைபெறவில்லை. சோழர்கள் காலத்தில் இருந்தே துறைமுக நகராக விளக்கும் நாகையில் உள்ள துறைமுகம் வெறும் பெயரளவுக்கே இருக்கிறது. அதனை மேம்படுத்தி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அளவுக்கு கட்டமைப்புக்கள் மேம்படுத்தப் படவில்லை. அனால் அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தனியார் துறைமுகம் அசுர வளர்ச்சியடைந்து கொண்டுள்ளது.
இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ எதுவும் இங்கு இல்லை. அதனால் வெளி மாவட்டங்களுக்கு பிழைப்பு தேடி செல்லுகிறார்கள் படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள். மீன்பிடித் தொழில் அளவுக்கு விவசாயமும் முக்கிய தொழிலாக விளங்குகிறது. விவசாயப் பொருட்களையும், மீன், இரால் உள்ளிட்டவற்றையும் சேமித்து வைக்கவோ, பதப்படுத்தி மதிப்பு கூட்டவோ கட்டமைப்பு வசதிகள் இல்லை.
நாகப்பட்டினம் மற்றும் நாகூர் நகரங்கள் எந்த வளர்ச்சியும் பெறவில்லை. ஒருபக்கம் கடல், ஒருபக்கம் திடல் என்ற அளவில் தான் இருக்கின்றன. குடிநீர் கூடகிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர்.
இங்கு இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஐந்துமுறை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மூன்றுமுறை அதிமுகவும், ஒருமுறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | எம். தமீம் அன்சாரி | அதிமுக - (மனிதநேய ஜனநாயக கட்சி) |
2 | ஏ.முகமது ஜபருல்லா | திமுக (மமக) |
3 | ஏ.பி.தமீம் அன்சாரி ஷாகிப் | இந்திய கம்யூ |
4 | கே.நேதாஜி | பா.ஜ.க |
5 | ஏ..பால்ராஜ் | பாமக |
6 | டி.நிறைந்தசெல்வம் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
நாகப்பட்டினம் தாலுகா (பகுதி)
கொங்கராயநல்லூர், அம்பல், கோட்டபாடி, ஏர்வாடி, கிடாமங்கலம், இடையத்தங்குடி, சேஷமூலை, அருன்மொழித்தேவன், ஆலத்தூர், தென்பீடாகை, பண்டாரவாடை, குருவாடி, போலகம், பொரக்குடி, திருப்புகளுர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம், ஆதலையூர், ஏனங்குடி, புதுக்கடை, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, கொத்தமங்கலம், அகர கொந்தகை, எரவாஞ்சேரி, சேகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை, ராராந்திமங்கலம், தென்கரை, விற்குடி, பில்லாளி, மேலபூதனூர், கீழப்பூதனூர், மருங்கூர், கோபுராஜபுரம், பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், குத்தாலம், துறையூர், நெய்க்குப்பை, பெரியகண்னமங்கலம், கொட்டாரக்குடி, கீழதஞ்சாவூர், திருப்பயத்தாங்குடி, காரையூர், வாழ்குடி, கங்களாஞ்சேரி, பெருங்கண்டம்பனூர், வடகுடி, நாகூர் (கோட்டகம்) தெத்தி, பாலையூர், இளம்கடம்பனூர், தேமங்கலம், சிரங்குடிபுலியூர், செங்கமங்கலம், செல்லூர், ஜ்வநல்லூர், அந்தணப்பேட்டை, பொரவச்சேரி, சிக்கல் மற்றும் பொன்வெளி கிராமங்கள்,
திட்டச்சேரி பேரூராட்சி மற்றும் நாகப்பட்டினம் நகராட்சி
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 89,661 |
பெண் | 93,386 |
மூன்றாம் பாலினத்தவர் | 1 |
மொத்த வாக்காளர்கள் | 1,83,048 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
2011 | கே. ஏ. ஜெயபால் | அதிமுக |
2006 | கோ.மாரிமுத்து | இகம்க(மா) |
2001 | ஜீவானந்தம் | அதிமுக |
1996 | நிஜாமுதீன் தே.லீக் | திமுக |
1991 | கோடிமாரி | அதிமுக |
1989 | கோ.வீரையன் | இகம்க(மா) |
1984 | கோ.வீரையன் | இகம்க(மா) |
1980 | உமாநாத் | இகம்க(மா) |
1977 | உமாநாத் | இகம்க(மா) |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | மாரிமுத்து.V | மார்க்சியக் கம்யூனிசக் கட்சி | 57315 |
2 | ஜெயபால்.K.A | அதிமுக | 54971 |
3 | மதியழகன் பெரு | தேமுதிக | 9949 |
4 | கார்த்திகேயன் S | பாஜக | 1758 |
5 | பஷீர்.S | தேசியவாத காங்கிரசு கட்சி | 655 |
6 | பன்னீர்செல்வம்.R | பகுஜன் சமாஜ் கட்சி | 412 |
125060 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | ஜெயபால்.K.A | அதிமுக | 61870 |
2 | முகமது ஷேக் தாவூத் | திமுக | 56127 |
3 | முருகானந்தம் | பாஜக | 1972 |
4 | ஜகபர் சாதிக் | பகுஜன் சமாஜ் கட்சி | 721 |
120690 |