திருவள்ளூர்

8 - அம்பத்தூர்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதியும் அடங்கும். தொகுதி மறுசீரமைப்பில் கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின் போது வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு அம்பத்தூர் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. பாடி, கொரட்டூர், கொளத்தூர், வில்லிவாக்கம், முகப்பேர் கிழக்கு, அயப்பாக்கம் ஆகிய ஊர்களின் ஒரு பகுதிகள் அம்பத்தூர் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

இத்தொகுதியில் ஆசியாவிலேயே உள்ள மிகப் பெரிய தொழிபேட்டைகளில் ஒன்றாக அம்பத்தூர் எஸ்டேட் தொழிற்பேட்டை விளங்குகிறது. இங்கு 3 ஆயித்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இத்தொகுதியில் பிரபல டிஐ சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலை, டன்லப் டயர் தொழிற்சாலை (தற்போது மூடப்பட்டுள்ளது), டிவிஎஸ் குழுமத்தின் தொழிற்சாலைகள் உள்ளன.

அத்துடன் டிசிஎஸ், எச்சிஎல் உள்ளிட்ட பிரபல ஐடி நிறுவனங்களும் உள்ளன. அம்பத்தூர் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு இப்பகுதியில் தரமான சாலை வசதியும், தெரு விளக்கு வசதியும் கிடைத்துள்ளது. அதேசமயம், பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதேபோல், குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

அம்பத்தூர் தொகுதி ஏரிகளால் சூழப்பட்டுள்ளது. ஆனால் அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் ஏரிகளை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏரி தண்ணீர் மாசடைந்துள்ளது. மேலும், இந்த ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால் அண்மையில் பெய்த மழைக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

அம்பத்தூரில் அரசு மருத்துவமனை, ஆண்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளி இல்லாதது மிகப் பெரிய குறையாக உள்ளது. அதேபோல் சமூகநலக் கூடமும் இல்லை. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அம்பத்தூர் வழியாக செல்கிறது. இச்சாலை போதிய விரிவாக்கம் செய்யப்படாததால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அம்பத்தூர் ரயில் நிலையத்தை கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அதேபோல், கொரட்டூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது. கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.வேதாச்சலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

வீ.அலெக்சாண்டர்

அதிமுக

2

அசன் மெளலானா

காங்கிரஸ்

3

ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தேமுதிக

4

கே.என்.சேகர்

பாமக

5

ச.தேவராஜன்

(இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்- பாஜக)

6

ரா.அன்புதென்னரசன்

நாம் தமிழர்

தொகுதியில் அடங்கும் பகுதிகள்

அம்பத்தூர் நகராட்சி வார்டு எண் 1 முதல் 34 வரை மற்றும் 37 முதல் 51 வரை

29/4/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

180697

பெண்

178436

மூன்றாம் பாலினித்தவர்

103

மொத்த வாக்காளர்கள்

359236

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - சட்டமன்ற தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

எஸ்.வேதாச்சலம்

அதிமுக

99330

2

பி.ரங்கநாதன்

திமுக

76613

3

ஜெயச்சந்திரன்

பிஜேபி

3912

4

தேவராஜன்

ஜேஎம்எம்

1128

5

முஹம்மது

பி எஸ் பி

962

6

ஜெகதீஸ்வரன்

எல்எஸ்பி

905

7

புவனேஸ்வரி

ஐ ஜே கே

905

8

லோகேஷ்

சுயேச்சை

608

9

பழனிவேல்

சி பி ஐ (எம் எல்)

477

10

எழுமலை

சுயேச்சை

461

11

ராஜேந்திரன்

சுயேச்சை

261

12

பாலாஜி

சுயேச்சை

201

13

லோகுபாபு

சுயேச்சை

184

14

இன்பராஜ்

சுயேச்சை

168

15

ராமகிருஷ்ணன்

சுயேச்சை

137

16

பழனி

சுயேச்சை

95

186347

SCROLL FOR NEXT